ADDED : ஆக 19, 2024 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளியில், நேற்று மாநில சிலம்ப போட்டி நடந்தது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 38 மாவட்டங்களில் இருந்து, 200 மாணவியர் உட்பட 600 மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடுமுறை, தனித்திறமை, இரட்டை கம்பு ஆகிய மூன்று பிரிவுகளில், மாணவர்கள் விளையாடினர்.
மூன்று பிரிவுகளிலும், ராணிப்பேட்டை மாவட்டம் முதலிடம் பிடித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.
முதல் மூன்று இடங்களை பிடித்த 27 மாணவர்கள், அடுத்த மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் தேசிய சிலம்ப போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

