/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெமிலிச்சேரியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் பகுதிவாசிகள் வேதனை
/
நெமிலிச்சேரியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் பகுதிவாசிகள் வேதனை
நெமிலிச்சேரியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் பகுதிவாசிகள் வேதனை
நெமிலிச்சேரியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் பகுதிவாசிகள் வேதனை
ADDED : ஜூலை 01, 2024 02:06 AM

நெமிலிச்சேரி:பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நெமிலிச்சேரி. இங்கு, நாகாத்தம்மன் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதிவாசிகளின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் சார்பில், 2018 -- 19ல், மாநில நிதி நிறுவனம் சார்பில் 10 லட்சம் ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
அதில் இருந்து பெறப்பட்ட குடிநீர், 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டியில் ஏற்றி, கடந்த 2022ம் ஆண்டு முதல் பகுதிவாசிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட வேண்டிய குடிநீர், ஒரு குடம் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. குடிநீர் வாயிலாக வசூலிக்கப்படும் பணத்தை, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் பங்கிட்டு கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அங்குள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பழுதாகி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மெத்தனம்
இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
ஊராட்சி நிர்வாகம் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் சரிசெய்யாமல் வழக்கம்போல மெத்தனமாக செயல்படுகிறது. இதனால், லாரி குடிநீரை ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஏற்கனவே, ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாததால், நெமிலிச்சேரி ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் முடங்கி போய் உள்ளது கண்கூடாக தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.