/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் புத்தக கண்காட்சி மாணவ, மாணவியர் ஆர்வம்
/
திருவள்ளூரில் புத்தக கண்காட்சி மாணவ, மாணவியர் ஆர்வம்
திருவள்ளூரில் புத்தக கண்காட்சி மாணவ, மாணவியர் ஆர்வம்
திருவள்ளூரில் புத்தக கண்காட்சி மாணவ, மாணவியர் ஆர்வம்
UPDATED : மார் 14, 2025 02:20 AM
ADDED : மார் 14, 2025 02:05 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் சி.வி. நாயுடு சாலையில் உள்ள பொருட்காட்சி திடலில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை மாணவ, மாணவியர் ஆர்வமாக பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா கடந்த, 7ம் தேதி துவங்கியது. அங்கு, 115 அரங்குகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சியை முன்னிட்டு, 10 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தினமும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. மாலையில், பல்வேறு தலைப்புகளில் பிரபல பேச்சாளர், கல்வியாளர்கள் பங்கேற்று சிந்தனை அரங்கத்தில் பேசி வருகின்றனர்.
நிகழ்ச்சியின் 7வது நாளான நேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாணவ, மாணவியர் ஆர்வமாக புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர். தங்களுக்கு தேவையான புத்தகங்களையும் வாங்கிச் சென்றனர்.
மாலையில் நடந்த சிந்தனை அரங்கத்தில் எழுத்தாளர் பாமரன், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், ஆகியோர் பேசினர். இன்று நடைபெற உள்ள சிந்தனை அரங்கத்தில், மருத்துவர் கு.சிவராமன், சங்கர சரவணன் ஆகியோர் பேசுகின்றனர்.