/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துணை மின் நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி
/
துணை மின் நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : பிப் 27, 2025 01:07 AM

பள்ளிப்பட்டு:பொதட்டூர்பேட்டையில் இருந்து, பள்ளிப்பட்டு செல்லும் சாலையில் பொம்மராஜபேட்டை அருகே துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில் இருந்து, பொதட்டூர்பேட்டை, பொம்மராஜபேட்டை, காவேரிராஜபேட்டை, கீழப்பூடி, மேலப்பூடி, சொரக்காய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த துணை மின்நிலையம் எதிரே பொதட்டூர்பேட்டை காவல் நிலையமும், அருகில் ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த துணை மின்நிலயத்தின் பின்புறம் ஓடை நீர்வரத்து கால்வாய் உள்ளது.
இந்த கால்வாயில், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், துார்வாருதல், புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவது உண்டு.
இந்நிலையில், துணை மின்நிலையத்தின் பின்புறம் உள்ள நடைபாதை வழியாக பகுதிவாசிகள் மற்றும் விவசாயிகள் நடமாட்டம் உள்ளது. இந்த நடைபாதையை ஒட்டி, துணை மின்நிலையத்தின் வேலியையும் தாண்டி, துணை மின்நிலைய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. பாதுகாப்பு கருதி, துணை மின்நிலைய வேலியை மேலும் விரிவாக்கம் செய்யவும், உறுதிப்படுத்தவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.