/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100 நாள் வேலை வழங்க கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்
/
100 நாள் வேலை வழங்க கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்
100 நாள் வேலை வழங்க கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்
100 நாள் வேலை வழங்க கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்
ADDED : ஆக 13, 2024 07:09 AM

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சுழற்சி முறையில், ---200 தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, போதிய நிதியுதவி மற்றும் வேலை இல்லாததால், குறைவாக தொழிலாளர்கள் கொண்டு வேலை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, 75க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் எங்களுக்கு 100 நாள் வேலையை முறையாக வழங்குவதில்லை என, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, திருத்தணி--- நாகாலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சு நடத்தினர். பின் மறியலை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.