/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி
ADDED : செப் 02, 2024 11:03 PM

திருவள்ளூர்: திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வெள்ளவேடு.
இப்பகுதியில் சாலையோரம் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால் சாலையில் நடந்து செல்லும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.