/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பார்வையற்றோருக்கான வாலிபால் தஞ்சை, கள்ளக்குறிச்சி முதலிடம்
/
பார்வையற்றோருக்கான வாலிபால் தஞ்சை, கள்ளக்குறிச்சி முதலிடம்
பார்வையற்றோருக்கான வாலிபால் தஞ்சை, கள்ளக்குறிச்சி முதலிடம்
பார்வையற்றோருக்கான வாலிபால் தஞ்சை, கள்ளக்குறிச்சி முதலிடம்
ADDED : ஜூலை 28, 2024 11:06 PM

சென்னை: தமிழ்நாடு பார்வையற்றோருக்கான வாலிபால் சங்கம் மற்றும் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி இணைந்து, பார்வையற்றோருக்கான ஒன்பதாவது ஆண்டு மாநில வாலிபால் போட்டியை, செம்மஞ்சேரியில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடத்தின.
இதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உட்பட, மாநில முழுதும் இருந்து 21 மாவட்ட அணிகள் பங்கேற்றன.
ஆண்களில் 16 அணிகளும், பெண்களில் ஐந்து அணிகளும், லீக் முறையில் மோதின. ஆண்களுக்கான அரையிறுதியில், தஞ்சாவூர் 15 - 8, 15 - 7 என்ற கணக்கில் திருப்பத்துார் அணியையும், மற்றொரு அரையிறுதியில், ஈரோடு அணி, 15 - 11, 15 - 12 என்ற கணக்கில் ராணிப்பேட்டை அணியையும் வீழ்த்தின.
அனைத்து போட்டிகள் முடிவில், தஞ்சாவூர் முதலிடத்தையும், ஈரோடு மற்றும் ராணிப்பேட்டை அணிகள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் வென்றன.
பெண்களுக்கான லீக் போட்டிகளில், கள்ளக்குறிச்சி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து விழுப்புரம் மூன்று போட்டிகளிலும், ஈரோடு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை வென்றன.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியின் நிறுவனர் பாபு மனோகரன் பரிசுகளை வழங்கினார்.