/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
20 கோடி கிலோ சர்க்கரை அரவை செய்ய இலக்கு
/
20 கோடி கிலோ சர்க்கரை அரவை செய்ய இலக்கு
ADDED : ஆக 25, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட பகுதியில், பதிவு செய்யப்படாத கரும்பு பரப்பை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை விடுபட்டுள்ள விவசாயிகள் கரும்பு பரப்பை பதிவு செய்யவும். நடப்பு 2024-- 25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு 7,355 ஏக்கர் பதிவு செய்யப்பட்டு, 20 கோடி கிலோ கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கரும்பு அரவை வரும் நவம்பர் 3வது வாரத்தில் துவங்கவுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

