/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆத்துப்பாக்கத்தில் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
/
ஆத்துப்பாக்கத்தில் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
ஆத்துப்பாக்கத்தில் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
ஆத்துப்பாக்கத்தில் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
ADDED : மே 10, 2024 01:01 AM
பெரியபாளையம், பெரியபாளையம் அருகே, ஆத்துப்பாக்கம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் மற்றும் செவிட்டு செல்லியம்மன் கோவில்கள் உள்ளன.
அதே கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், 48. கோவிந்தன், 70 ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் கோவில்களை பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று காலை கோவில் வழியே சென்ற மக்கள், கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கோவிலில் உண்டியல்களை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை அங்குள்ள ஏரியில் வீசிவிட்டு சென்றது தெரிந்தது.
இரண்டு கோவில்களிலும் அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி திருடு போயுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளாக கோவில் உண்டியலில் உள்ள பணம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, உண்டியலில் 2 லட்ச ரூபாய் இருந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.