ADDED : ஆக 17, 2024 07:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளுர் அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் கார்த்திக் கிரிஷ், 6, என்ற சிறுவன் திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். வீட்டின் அருகே மரம் வெட்டி கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, விஷ வண்டு கடித்தது.
சிறுவன் திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பலியானார்.
செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

