ADDED : செப் 01, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரூர்: தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்ற கார் மற்றும் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில், பேருந்தின் முன் பகுதி முழுதும் சேதமடைந்தது.
தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில், போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் சென்ற ஆம்னி பேருந்தில் உரசும்படியாக வந்துள்ளது.
சுதாரித்த ஆம்னி பேருந்து ஓட்டுனர், பேருந்தை வலது புறம் திருப்பவே, சாலை தடுப்பில் மோதி அங்கிருந்த அறிவிப்பு பலகை மீது மோதியது.
இதில், பேருந்தின் முன் பக்கம் முழுதும் சேதமடைந்ததுடன், கண்ணாடியும் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, கிரேன் உதவியுடன் பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.