/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீப்பற்றி எரிந்த கார் சோழவரத்தில் பரபரப்பு
/
தீப்பற்றி எரிந்த கார் சோழவரத்தில் பரபரப்பு
ADDED : ஆக 29, 2024 02:31 AM

சோழவரம்:கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கலையரசன், 40, என்பவர், நண்பர்களுடன் சென்னை புதுப்பாக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு, நேற்று மாலை, 'மாருதி ஸ்விப்ட்' காரில் வந்து கொண்டிருந்தார்.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த நல்லுார் டோல்கேட் பகுதியை கடக்கும்போது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வருவதை கண்டனர்.
உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். கார் மளமளவென தீப்பற்றி எரிய துவங்கியது. இதனால், வாகனங்கள் ஆங்காங்கே சாலையில் நின்றன.
தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார் முழுதும் எரிந்து எலும்புக்கூடானது. இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

