/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருள் சூழ்ந்த திருவாலங்காடு ரயில் நிலைய சாலை
/
இருள் சூழ்ந்த திருவாலங்காடு ரயில் நிலைய சாலை
ADDED : மே 07, 2024 11:58 PM

திருவாலங்காடு:சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம்.
இந்த ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் வாயிலாக திருவள்ளூர், சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு 50,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் ரயில் வாயிலாக சென்று வருகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையில் டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கவுன்டர் சாலை வழியாக பெரியகளக்காட்டூர், தக்கோலம், அரிசந்திராபுரம் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
இச்சாலையில் மின்கம்பம் இருந்தும் மின்விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், இரவில் அந்தபகுதி கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.
இதனால், பெண்பயணியர் பள்ளி, கல்லுாரி சென்று இரவு வீடு திரும்பும் மாணவ - மாணவியர் அச்சப்படுகின்றனர். இச்சாலையில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

