/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் கட்ட தோண்டிய பள்ளம் பணி துவங்காமல் மெத்தனம்
/
கால்வாய் கட்ட தோண்டிய பள்ளம் பணி துவங்காமல் மெத்தனம்
கால்வாய் கட்ட தோண்டிய பள்ளம் பணி துவங்காமல் மெத்தனம்
கால்வாய் கட்ட தோண்டிய பள்ளம் பணி துவங்காமல் மெத்தனம்
ADDED : ஜூலை 15, 2024 01:51 AM

திருத்தணி: திருத்தணி நகரத்தில் ம.பொ.சி., சாலையில் ரயில் நிலையம், அரசு நடுநிலைப் பள்ளி, அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், திருத்தணி பேருந்து நிலையம், முருகன் கோவில், அரக்கோணம், காஞ்சிபுரம் மார்க்கத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ம.பொ.சி., சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், மழை பெய்யும் போது, வெள்ளநீர் செல்வதற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்காததால், கடந்த ஒன்றரை மாதமாக மாநில நெடுஞ்சாலையில் மழைநீர் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து பாதிப்பு மற்றும் மக்கள் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து கடந்த மாதம், சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், மழைநீர் வடிகால்வாய் கட்டுவதற்கு திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டினர். ஆனால், இதுவரை தோண்டிய பள்ளத்தில் கால்வாய் அமைக்கவில்லை.
மேலும் பள்ளம் தோண்டிய மண் கழிவுகள் சாலையிலேயே கொட்டியுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர மழை பெய்ததால், மீண்டும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
எனவே, மழைநீர் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

