/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
கும்மிடி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
UPDATED : ஆக 01, 2024 03:02 AM
ADDED : ஆக 01, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் வள்ளி, தேவசேனா சமேத ஞானவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு, மூன்று நாள் உற்சவம் நடைபெற்றது.
மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலை சங்காபிஷேகமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மணக்கோலத்தில் காட்சியளித்த முருகனை வழிபட்டனர். தொடர்ந்து, ஞானவேல் முருகன் வீதியுலா சென்றார்.