/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு
/
இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு
ADDED : மார் 29, 2024 09:08 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், 31 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம், வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, காங்., சசிகாந்த், தே.மு.தி.க., நல்லதம்பி, பா.ஜ., பொன் பாலகணபதி உள்ளிட்ட 14 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பாளர்கள், தங்களது மனுக்களை இன்று மாலை 3:00 மணிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதன் பின், இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களின் சின்னங்களுடன் இன்று மாலை மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.
l திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, தொலைக்காட்சியில் வரும் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்களை கண்காணித்து பதிவேடுகளில் பதிவிட்டு வருகிறது.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு வாகனங்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பதை தவிர்க்கும் வகையில் அவர்களது வாகனங்களின் அசைவுகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்மையத்தை, திருவள்ளூர் லோக்சபா தொகுதி மத்திய பொது பார்வையாளர் அபு இம்ரான் நேற்று ஆய்வு செய்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர், மத்திய தேர்தல் பார்வையாளரிடம் எடுத்துரைத்தார்.

