/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட எம்.எல்.ஏ., அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக ஆவேசம்
/
அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட எம்.எல்.ஏ., அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக ஆவேசம்
அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட எம்.எல்.ஏ., அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக ஆவேசம்
அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட எம்.எல்.ஏ., அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக ஆவேசம்
ADDED : ஆக 09, 2024 01:10 AM

திருத்தணி,:திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம், பெரியகடம்பூர், சின்னகடம்பூர், மாம்பாக்கம், செருக்கனுார் உட்பட 9 ஊராட்சிகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
திருத்தணி தாசில்தார் மலர்விழி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
அலைக்கழிப்பு
முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், கால்நடை, மின்சாரம், மாற்றுத்திறனாளி, வேளாண், குடிசை மாற்று வாரியம் உட்பட அனைத்து துறையின் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரணி ஆகியோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்கள் பெற்றார்.
எம்.எல்.ஏ., சந்திரன் ஒவ்வொரு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட ஸ்டால்களை பார்வையிட்டு, அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மாற்றுத்திறனாளி துறையை பார்வையிட்ட போது, பி.டி.புதுார் மாற்றுத்திறனாளி காந்தி, 60, என்பவர் எம்.எல்.ஏ.,விடம் கண்ணீர் மல்க, இரு ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர் என தெரிவித்தார்.
உடனே எம்.எல்.ஏ., மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம், 'இத்திட்டம், மக்களை தேடி அரசு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதற்கு தான் முகாம் நடத்தப்படுகிறது. ஆனால், நீங்கள் அலட்சியமாக செயல்படுகிறீர்கள், இதனால் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
கடும் நடவடிக்கை
அனைத்து துறை அதிகாரிகள் இதுபோன்று மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, ஒரு வாரத்திற்குள் அடையாள அட்டை வழங்க வேண்டும்' என கூறினார். இதனால் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரசேரி, கூவம், சத்தரை, புதுமாவிலங்கை, காவாங்கொளத்துார், சிற்றம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று பேரம்பாக்கம் மீனாட்சி ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்தது.
பேரம்பாக்கம் ஊராட்சி தலைவர் ஜெயந்தி, கடம்பத்துார் ஒன்றிய அலுவலர்கள் மணிசேகர், செல்வகுமார் முன்னிலையில் கடம்பத்துார் ஒன்றியக் குழு தலைவர் சுஜாதா தலைமையில் நடந்தது.
முகாமை, திருவள்ளூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
முகாமில், 18 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். முகாமில் 621 ஆண்கள் 1,045 பெண்கள் என மொத்தம் அப்பகுதிவாசிகள், 1,666 பேர் பங்கேற்று வீட்டு மனை பட்டா, புதிய மின் இணைப்பு என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கினர்.