/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
* செய்தி மட்டும் குழாய் பழுதாகி வீணாகும் குடிநீர்
/
* செய்தி மட்டும் குழாய் பழுதாகி வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 20, 2025 01:14 AM

கண்ணுார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணுார். இங்கு, 2004 - 05ம் ஆண்டு கட்டப்பட்ட 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த குடிநீர் தொட்டி, 2015 - 16ம் ஆண்டு, ஊரக வளர்ச்சி கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின், 10 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல இடங்களில் சேதமடைந்தும், வால்வு மற்றும் குழாய் பழுதடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
மேலும், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமலேயே குடிநீர் வழங்கப்படுவதாகவும் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில் ஆய்வு செய்து அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டி மற்றும் குழாய் பகுதியை சீரமைக்க வேண்டும் என, கண்ணுார் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

