/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டா மாற்ற விண்ணப்பித்த முதியவர் 6 ஆண்டுகளாக அலைக்கழிப்பு
/
பட்டா மாற்ற விண்ணப்பித்த முதியவர் 6 ஆண்டுகளாக அலைக்கழிப்பு
பட்டா மாற்ற விண்ணப்பித்த முதியவர் 6 ஆண்டுகளாக அலைக்கழிப்பு
பட்டா மாற்ற விண்ணப்பித்த முதியவர் 6 ஆண்டுகளாக அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 02, 2024 08:34 PM
திருவள்ளூர்:திருத்தணி தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டு, ஆறு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுவதாக முதியவர், கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
திருத்தணியைச் சேர்ந்த மகாலிங்கம், 74 என்ற முதியவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருத்தணி வட்டம், கார்த்திகேயபுரம், வள்ளியம்மாபுரம் கிராமத்தில் கடந்த, 1985ம் ஆண்டு எனது மனைவி சுசீலா பெயரில், சீனிவாசன் மற்றும் அவரது மகன்களிடம் இருந்து, 1,200 ச.அடி மனையை வாங்கினார். எனது மனைவி 2016ல் இறந்து விட்டார்.
இதையடுத்து அந்த இடத்தை வாரிசுதாரர்களான நான் மற்றும் எனது இரண்டு மகள்கள் பெயரில் மாற்றித்தர கடந்த, 2019ல் திருத்தணி தாசில்தாரிடம் மனு அளித்தேன். ஆனால், இதுவரை அந்த இடத்தை எங்கள் பெயரில் மாற்றித்தராமல் அலைக்கழிக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது அந்த இடத்தை குப்புசாமி என்பவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. எனவே, அந்த பட்டாவை ரத்து செய்து, எங்களது பெயரில் மாற்றித்தர மீண்டும் 2023ல் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தேன். ஆனால், இதுவரை மாற்றித்தரவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.