/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவி குளித்ததை படம் பிடித்தவர் கைது
/
மாணவி குளித்ததை படம் பிடித்தவர் கைது
ADDED : ஜூலை 21, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 16 வயது மாணவி ஒருவர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாணவி வீட்டின் அருகே உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். இதை மர்ம நபர் ஒருவர் மொபைல் மூலம் படம் பிடித்தார்.
இதை பார்த்த மாணவி கூச்சல் போட்டதால் அந்த நபர் ஓடினார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை படம் பிடித்த காவேரிராஜபுரம் சேர்ந்த விஜய், 26 என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.