ADDED : செப் 14, 2024 08:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளவேடு:வெள்ளவேடு அடுத்த சொக்காநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ், 20.
இவர் நேற்று முன்தினம் மாலை தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்நத பென்னி, 26 என்பவர் நிதிஷிடம் ஆபாசமாக பேசி பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுக்கவே கத்தியால் வெட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த நிதிஷ் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நிதிஷ் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார் பென்னியை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.