/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் புதரில் மாயமாகி வரும் அவலம்
/
பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் புதரில் மாயமாகி வரும் அவலம்
பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் புதரில் மாயமாகி வரும் அவலம்
பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் புதரில் மாயமாகி வரும் அவலம்
ADDED : மார் 07, 2025 02:08 AM

நுங்கம்பாக்கம்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, நுங்கம்பாக்கம் ஊராட்சி. இங்கு, 15 ஆண்டுகளுக்கு முன், மப்பேடு செல்லும் சாலையில், ஏரிக்கரை அருகே, 2004 --- 05ம் ஆண்டு கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்தினர்.
இந்நிலையில், பராமரிப்பில்லாமல் பூட்டிக் கிடந்த மகளிர் சுகாதார வளாகத்தை ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, 2019 -- 20ம் ஆண்டு, பொது நிதியின் கீழ், 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
மேலும், குப்பை கொட்டும் இடமாக மாறி, புதர் மண்டி வீணாகி வருவது அப்பகுதி பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.