/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
களத்தில் இறங்கிய பொன்னேரி நகராட்சி தண்ணீர் பந்தலுக்கு பதில் குடிநீர் தொட்டி
/
களத்தில் இறங்கிய பொன்னேரி நகராட்சி தண்ணீர் பந்தலுக்கு பதில் குடிநீர் தொட்டி
களத்தில் இறங்கிய பொன்னேரி நகராட்சி தண்ணீர் பந்தலுக்கு பதில் குடிநீர் தொட்டி
களத்தில் இறங்கிய பொன்னேரி நகராட்சி தண்ணீர் பந்தலுக்கு பதில் குடிநீர் தொட்டி
ADDED : ஏப் 26, 2024 12:59 AM

பொன்னேரி:பொன்னேரியை சுற்றிலும் உள்ள, 200க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு பொன்னேரி பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
கோடை காலங்களில் மேற்கண்ட கிராமவாசிகள் பொன்னேரி வந்து செல்லும்போது தாகம் தணிக்க, கடை, ஹோட்டல்களில் தண்ணீர் வாங்கி பருகுவர்.
இவர்களுக்காக கோடை வெயில் துவங்கும்போது, பல்வேறு அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல் திறந்து வைப்பர். முதல் நாள் துவக்க விழாவின்போது, தர்பூசணி, இளநீர், மோர் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்குவர்.
விளம்பரத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் பந்தல்களில், அடுத்த நாளில் இருந்து, இரண்டு மண்பானைகளில் தண்ணீர் இருக்கும்.
அதுவும் சிலநாட்களுக்கு தொடருவர். அதன்பின், தண்ணீர் பந்தல்கள் கேட்பாரற்று போகும். இந்த ஆண்டு கோடை காலம் துவங்கியும், லோக்சபா தேர்தல் நடந்தும், அரசியல் கட்சியினர் விளம்பரத்திற்கு கூட, தண்ணீர் பந்தல்கள் திறக்கவில்லை.
இந்நிலையில், பொன்னேரி நகராட்சி சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பழைய பஸ்நிலையம், அம்பேத்கர் சிலை, தேரடி, சின்னகாவணம், ஆகிய இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து குடிநீர் தொட்டிகளை வைத்து உள்ளனர்.
ஒவ்வொரு தொட்டியும், 500 லிட்டர் கொள்ளளவு கொண்டாக இருக்கிறது. தினமும் டிராக்டர்களில் குடிநீர் கொண்டு வந்து தொட்டிகளில் நிரப்புகின்றனர். இவை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.

