/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொடர் மின் வெட்டு பிரச்னை ஆரம்பாக்கம் மக்கள் தவிப்பு
/
தொடர் மின் வெட்டு பிரச்னை ஆரம்பாக்கம் மக்கள் தவிப்பு
தொடர் மின் வெட்டு பிரச்னை ஆரம்பாக்கம் மக்கள் தவிப்பு
தொடர் மின் வெட்டு பிரச்னை ஆரம்பாக்கம் மக்கள் தவிப்பு
ADDED : ஆக 03, 2024 10:53 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது ஆரம்பாக்கம் பகுதி. ஆரம்பாக்கம், தோக்கமூர், பூவலை, எகுமதுரை உட்பட 15க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு, தண்டலம் கிராமத்தில் உள்ள ஆளில்லா துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, தினமும், மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்படுவதாக மேற்கண்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை குறித்து எளாவூர் உதவி மின் பொறியாளர் அலுவலகம் மற்றும் சிப்காட் அலகு நான்கு துணை மின் நிலையத்தில், அப்பகுதி மக்கள், பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எளாவூர் உதவி மின் பொறியாளர் அலுவலக மின் ஊழியர்கள், மின் பாதையில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பூவலை கிராமம் முதல் ஆரம்பாக்கம் வரையிலான மின் பாதையில் உள்ள மின் கம்பிகள், 50 ஆண்டுகள் பழமையானது. அதனால் மின் பளு தாங்காமல் அடிக்கடி மின் கம்பிகள் துண்டிப்பதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து ஆரம்பாக்கம் பகுதியில் தடையில்லா மின் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.