ADDED : ஆக 25, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல்:அரக்கோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து துணிகளை ஏற்றிக் கொண்டு, சரக்கு லாரி ஒன்று நேற்று காலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு நோக்கி வந்தது. மதுரவாயல் பகுதியில் வந்த போது, திடீரென லாரியின் டயர் வெடித்தது.
இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரி கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் சிறுகாயங்களுடன் தப்பினார். வாகனங்கள் அணிவகுத்து, 4 கி.மீ., துாரத்திற்கு நின்றன. தகவலறிந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார், லாரியை 'பொக்லைன்' வாயிலாக அப்புறப்படுத்தினர்.