ADDED : மே 25, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில் வசித்தவர் செல்வம், 64.
நேற்று முன்தினம், பஞ்செட்டி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.