நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் கிராமத்தில், மதுபாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் தரணிவராகபுரம் கிராமத்தில் சோதனை நடத்திய போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி வாணி, 55, என்பவர் வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
போலீசார், வாணியை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த, 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.