/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உணவு பார்சலுக்கு பணம் தராமல் ஊழியர்களை தாக்கிய வாலிபர்கள்
/
உணவு பார்சலுக்கு பணம் தராமல் ஊழியர்களை தாக்கிய வாலிபர்கள்
உணவு பார்சலுக்கு பணம் தராமல் ஊழியர்களை தாக்கிய வாலிபர்கள்
உணவு பார்சலுக்கு பணம் தராமல் ஊழியர்களை தாக்கிய வாலிபர்கள்
ADDED : ஏப் 30, 2024 09:50 PM
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட, கோரகுப்பம் கிராமம் அருகே உள்ள மாநில நெடுஞ்சாலையில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இதையொட்டி, ஏராளமான துரித உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று அங்குள்ள உணவகம் ஒன்றில், சிக்கன் மற்றும் மீன் உள்ளிட்டவற்றை வாங்கிய நான்கு பேர் கொண்ட கும்பல், பணம் கொடுக்க மறுத்து, உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும், அங்கிருந்த பொருட்களை துாக்கி வீசி அட்டகாசம் செய்தனர்.
இதை தட்டிக் கேட்ட உணவக ஊழியர்களான குணசேகரன் மற்றும் ருக்மணி ஆகியோரை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து உணவக உரிமையாளர் சுமதி, பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட வெங்கல்ராஜகுப்பம் காலனியைச் சேர்ந்த கோபி, ஸ்டீபன்ராஜ், இமான், ராஜ்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.