ADDED : மார் 04, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை,
பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து 2:00 மணிக்கு மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று துவங்கிய மகாபாரத சொற்பொழிவு, வரும் 24ம் தேதி வரை, தினசரி 2:00 மணிக்கு நடைபெற உள்ளது.
வரும் 13ம் தேதி முதல், 22ம் தேதி வரை, இரவு 10:00 மணிக்கு மகாபாரத நிகழ்வுகள் தெருக்கூத்தாக நடத்தப்பட உள்ளது.
வரும் 23ம் தேதி, காலை 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நடைபெறும். அன்று, மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் நேற்று முதல் காப்பு கட்டி விரதத்தை துவக்கிஉள்ளனர்.