/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சர்க்கஸ் பார்க்கிங் பகுதிக்கு 'கொக்கி'யால் மின்சாரம் திருட்டு
/
சர்க்கஸ் பார்க்கிங் பகுதிக்கு 'கொக்கி'யால் மின்சாரம் திருட்டு
சர்க்கஸ் பார்க்கிங் பகுதிக்கு 'கொக்கி'யால் மின்சாரம் திருட்டு
சர்க்கஸ் பார்க்கிங் பகுதிக்கு 'கொக்கி'யால் மின்சாரம் திருட்டு
ADDED : மே 19, 2024 09:58 PM

பொன்னேரி: பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில், தனியார் சர்க்கஸ் மூன்று தினங்களாக நடக்கிறது. இங்கு வரும் பார்வையாளர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக, அதே பகுதியில் தாலுாகா அலுவலகம் அருகில், கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு உள்ளது.
அப்பகுதியில் மின்விளக்கு வசதிக்காக, மின்கம்பத்தில் இருந்து நேரிடையாக மின்சாரம் கொக்கிபோட்டு எடுக்கப்படுகிறது. மாலையில் கொக்கி போடுவதும், நள்ளிரவில் கழற்றி விடுவதாகவும் உள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், கொக்கிபோடும்போது மின்விபத்துக்களும் உண்டாக வாய்ப்பு உள்ளது. மின்வாரியம் உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.