/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டில் ஜெனரேட்டர் திருட்டு
/
பள்ளிப்பட்டில் ஜெனரேட்டர் திருட்டு
ADDED : ஏப் 04, 2024 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்திற்கு உரிய இடத்தில், ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் மின்சாதன பொருட்கள் இருந்தன. இங்கு, ராணிப்பேட்டை மாவட்டம், வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த தீரன், 31, என்பவர் கண்காணிப்பாளராக உள்ளார்.
இந்நிலையில், இங்கிருந்த 30 கே.வி., ஜெனரேட்டர், 15 கே.வி., மின்மாற்றி மற்றும் பேட்டரி உள்ளிட்டவை திருடு போயுள்ளன. இது குறித்து தீரன், பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார், விசாரித்து வருகின்றனர்.

