/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் ஆங்காங்கே பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சாலையில் ஆங்காங்கே பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையில் ஆங்காங்கே பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையில் ஆங்காங்கே பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஏப் 03, 2024 01:15 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட இரட்டைமலை சீனிவாசனார் சாலை, பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் துவங்கி, பொன்னேரி - தச்சூர் நெடுஞ்சாலையில் இணைகிறது.
பாதாள சாக்கடை திட்டப்பணிகளால், இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் சாலை புதுப்பிக்கப்பட்டது.
பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட இடங்களில் சாலை தரமாக அமைக்கப்படாததால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. கால்நடை மருத்துவமனை அருகே சாலை உள்வாங்கி இருக்கிறது. வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழுகின்றனர்.
ஒரு சில இடங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். அப்பகுதிகளில் குடியிருப்புவாசிகள் முட்செடிகளை வைத்து எச்சரிக்கை செய்து உள்ளனர்.
மேற்கண்ட சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

