/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் வழித்தடத்தை ஆக்கிரமித்து காய்கறி விற்பனையால் கடும் அவதி
/
பஸ் வழித்தடத்தை ஆக்கிரமித்து காய்கறி விற்பனையால் கடும் அவதி
பஸ் வழித்தடத்தை ஆக்கிரமித்து காய்கறி விற்பனையால் கடும் அவதி
பஸ் வழித்தடத்தை ஆக்கிரமித்து காய்கறி விற்பனையால் கடும் அவதி
ADDED : ஜூலை 05, 2024 12:53 AM

திருவள்ளூர்,:பேருந்து செல்லும் வழித்தடத்தை மறித்து வாகனங்களை நிறுத்தி, காய்கறி விற்பனை செய்வதால், கலெக்டர் அலுவலகம் அருகில் நெரிசல் ஏற்படுகிறது.
திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. பேருந்துகள் நிறுத்தம் அருகே வரும் வகையில், போலீசார் 'பேரிகார்டு' வைத்துள்ளனர்.
ஆனால், பேருந்துகள் செல்லும் வழியில் சிலர் வாகனங்களை நிறுத்தி, வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதை வாங்க வருவோர் சாலையிலேயே தங்களது வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், பேருந்துகள் பேருந்து நிறுத்தம் செல்ல முடியாமல், சாலையில் நிறுத்தப்படுகின்றன.
எனவே, பேருந்து வழித்தடத்தை மறித்து ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் மற்றும் வாகனங்களை போலீசார் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.