/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாய்கடிக்கு கூட மருந்து இல்லை கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
/
நாய்கடிக்கு கூட மருந்து இல்லை கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
நாய்கடிக்கு கூட மருந்து இல்லை கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
நாய்கடிக்கு கூட மருந்து இல்லை கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
ADDED : ஆக 29, 2024 02:30 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம், ஒன்றிய குழுத் தலைவர் தங்கதனம் தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில், 12ல், 10 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வரவு - செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது.
தொடர்ந்து, பட்டாபிராமபுரம், சூர்யநகரம், சத்திரஞ்ஜெயபுரம் மற்றும் பெரியகடம்பூர் ஆகிய நான்கு அரசு தொடக்கப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் இடித்து அகற்றுதல், 12 ஊராட்சிகளில், 60 லட்சம் ரூபாயில், கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைத்தல் பணிகள் உட்பட, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கவுன்சிலர்கள், சிறுகுமி ஏரியில் இரண்டு குளங்கள் வெட்டுவது நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏரியில் குளம் வெட்டுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, அரசு மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் குளங்கள் வெட்டினால் தண்ணீர் சேமிக்கலாம். அரசு நிதியும் வீணாகாது.
அதே போல், ஊராட்சிகளில் பணிபுரியும் கொசு ஒழிப்பு ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை. பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால், எந்த சிகிச்சைக்கு சென்றாலும், சோளிங்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
நாய்கடிக்கு கூட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி இல்லை. சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர், செவிலியர்களை பணியில் நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

