/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.கே.பேட்டை ஆதார் மையத்தில் இடவசதி இருந்தும் இருக்கை இல்லை
/
ஆர்.கே.பேட்டை ஆதார் மையத்தில் இடவசதி இருந்தும் இருக்கை இல்லை
ஆர்.கே.பேட்டை ஆதார் மையத்தில் இடவசதி இருந்தும் இருக்கை இல்லை
ஆர்.கே.பேட்டை ஆதார் மையத்தில் இடவசதி இருந்தும் இருக்கை இல்லை
ADDED : ஜூன் 28, 2024 02:47 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் மற்றும் இ- சேவை மையம் செயல்பட்டு வருகின்றன.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளை சேர்ந்த பகுதிவாசிகள் ஏராளமானோர் தினசரி இங்கு வந்து செல்கின்றனர். ஆதார் அட்டையில் திருத்தம் மற்றும் புதிய பதிவு மேற்கொள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வந்து செல்கின்றனர்.
விஸ்தீரணமான இந்த அலுவலகத்தில், போதிய இடவசதி இருந்தும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலான பகுதிவாசிகள் காத்திருக்க போதிய இருக்கை வசதி இல்லை.
இதனால், இந்த சேவை மையத்தின் வாசலில் காத்திருக்க நேரிடுகிறது.
இது தவிர, இதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய நுழைவாயில் பகுதியில் மரத்தடியில் உள்ள எழுத்தர்களிடமும் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆதார் சேவை மையத்தில் இருக்கை மற்றும் விண்ணப்பங்கள் நிரப்ப மேசை வசதியுடன், குடிநீர், வின்விசிறி, கழிப்பறை, தாய்மார்கள் பாலுாட்டும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், ஆதார் மற்றும் சேவை மையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விவரங்களை தெளிவாக எழுதி வைக்கவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.