/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு
/
ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு
ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு
ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு
ADDED : ஏப் 29, 2024 11:34 PM

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 32. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், 'சிலிக்கான்' பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இவர், பல மாதங்களாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள், நுரையீரல் முழுதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சென்ற போது, சிகிச்சை அளித்து குணப்படுத்த 45 லட்சம் ரூபாய் செலவாகும் என, மருத்துவர்கள் தெரிவித்துஉள்ளனர்.
இதையடுத்து, தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் தொழிற்சாலைக்கு சென்று மருத்துவ உதவிக்காக பணம் கேட்டபோது, அவர்கள் பணம் தரமறுத்ததாக கூறப்படுகிறது.
தற்போது, பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் உடன் செயற்கை சுவாசத்தால் மட்டுமே அவர் உயிர் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதையடுத்து, நேற்று காலை பிரவீன்குமார், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
இதை பார்த்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

