/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திடுட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திடுட்டு
ADDED : பிப் 22, 2025 10:42 PM
திருவாலங்காடு:பூண்டி ஒன்றியம், தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லியம்மா, 55; இவரது கணவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், டில்லியம்மா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவருடைய இரண்டு மகன்களும் திருவள்ளூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன், டில்லியம்மா சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருமகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் டில்லியம்மாவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட பகுதிவாசிகள், கனகம்மாசத்திரம் போலீசாருக்கும் டில்லியம்மாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.
டில்லியம்மா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை, ஒரு லட்சத்து 50,000 ரூபாய் திருடு போயிருப்பதை கண்டார்.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.