/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : ஆக 05, 2024 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத அமாவாசை ஒட்டி காலை, 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு பால் அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
காலை, 9:30 மணிக்கு கோவில் அருகே உற்சவர் மூர்த்திகளான உமாமகேஷ்வரன், அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர். மாலையில் உற்சவர் ஊஞ்சல் சேவையும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.