/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி பி.டி.ஓ., பொறுப்பேற்பு
/
திருத்தணி பி.டி.ஓ., பொறுப்பேற்பு
ADDED : மார் 04, 2025 07:24 PM
திருத்தணி:திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சாந்தி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, திருத்தணி ஒன்றிய அலுவலகத்தின் புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக செல்வராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர், பதவி உயர்வு பெற்று, திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், 18 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு உதவியாளர்களுக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.