/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு சிட்கோ பணிக்கு விரைவில்...'டெண்டர்!' :3 ஆண்டு இழுத்தடிப்பிற்கு பின் புத்துயிர்
/
திருவாலங்காடு சிட்கோ பணிக்கு விரைவில்...'டெண்டர்!' :3 ஆண்டு இழுத்தடிப்பிற்கு பின் புத்துயிர்
திருவாலங்காடு சிட்கோ பணிக்கு விரைவில்...'டெண்டர்!' :3 ஆண்டு இழுத்தடிப்பிற்கு பின் புத்துயிர்
திருவாலங்காடு சிட்கோ பணிக்கு விரைவில்...'டெண்டர்!' :3 ஆண்டு இழுத்தடிப்பிற்கு பின் புத்துயிர்
ADDED : ஆக 01, 2024 12:46 AM

திருவாலங்காடு:திருவாலங்காடில் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்து, மூன்று ஆண்டுகளான நிலையில், பணி மந்தமாக நடைபெறுகிறது. இதனால், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விரைவில் டெண்டர் விடப்பட்டு, பணி துவங்க உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும், 25,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்காக, 25 -- 45 கி.மீ., தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்புதுார், அம்பத்துார், ஒரகடத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதை மாற்றும் முயற்சியாக, இளைஞர்களின் நலன் கருதி திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என, 2014ம் ஆண்டு முதல் திருவாலங்காடு பகுதிவாசிகள் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், 2016 முதல் 2021 வரையில் தொடர் கோரிக்கை வைத்ததன் பேரில், 2022ம் ஆண்டு திருவாலங்காடில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, சிறு, குறு தொழிற்சாலை துறை அமைச்சர் அன்பரசன் சட்டசபையில் தெரிவித்தார்.
திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரத்தில், 140 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் தனிநபர் ஒருவர் பசுமை தீர்ப்பாயத்தில் காடுகள் அழிக்கப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக வழக்கு தொடர்ந்தார்.
பின் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கு முடிந்த நிலையில், ஓராண்டாக தொழிற்பேட்டை அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
சிட்கோ பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், முதற்கட்டமாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், 'ஈசி அப்ரூவல்' கொடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் 'டெண்டர்' விடப்பட்டு பணி துவங்க உள்ளது.
சிட்கோ அதிகாரி, திருவள்ளூர்.
காவேரிராஜபுரத்தில் தொழிற்பேட்டை அமைக்க 140 ஏக்கர் நிலம் கோரப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக அனாதினம், அரசு புறம்
காவேரி ராஜபுரத்தில் தொழிற்பேட்டை அமைக்க 140 ஏக்கர் நிலம் கோரப்பட்டது. அதன் படி முதற்கட்டமாக அனாதினம் அரசு புறம் போக்கு போக்கு நிலங்களான, சர்வே எண்: 369/2 மற்றும் 376 என, இரண்டு சர்வே எண்களில் உள்ள 29 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைத்து உள்ளோம். அதன்படி, அந்த நிலங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
- வருவாய் அதிகாரி, திருத்தணி.
சிட்கோ பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் முதற்கட்டமாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஈசி அப்ரூவல் கொடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணி துவங்க உள்ளது.
சிட்கோ அதிகாரி, திருவள்ளூர்.