/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு ரயில்வே கேட் கோளாறு; திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள்
/
திருவாலங்காடு ரயில்வே கேட் கோளாறு; திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள்
திருவாலங்காடு ரயில்வே கேட் கோளாறு; திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள்
திருவாலங்காடு ரயில்வே கேட் கோளாறு; திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 16, 2024 11:17 PM

திருவாலங்காடு : சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த மார்க்கமாக தினமும் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
தண்டவாளத்தை கடந்து கனகம்மாசத்திரம் --தக்கோலம் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
தண்டவாளத்தை வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக கடக்க ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேட் 10 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை திறக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இந்த கேட் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
கேட்டை திறக்கும் போது ஒரு பக்கம் மட்டும் திறந்து மறுபக்கம் திறக்காததால் வாகன ஓட்டிகள் தண்டவாளத்தில் வந்து காத்திருக்கும் ஆபத்தான நிலை உள்ளது. அந்த சமயத்தில் ரயில் வந்தால் உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அவ்வப்போது கேட் பழுது ஏற்படுவதால் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக புலம்புகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கேட் மூடப்பட்டு இருக்கும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை வளைத்து கொண்டு செல்கின்றனர்.
'அவ்வாறு செல்வோர் கேட் மீது இடித்து விட்டு செல்கின்றனர். இதனால் கேட் திறக்கும் போது கோளாறு ஏற்படுகிறது. இதை தடுக்க கேட் கீப்பரிடம் அறிவுறுத்தி உள்ளோம்' என்றார்.