/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு கோவில் கடைகள் ஏலம் விடுவதில் தாமதத்தால் நஷ்டம்
/
திருவாலங்காடு கோவில் கடைகள் ஏலம் விடுவதில் தாமதத்தால் நஷ்டம்
திருவாலங்காடு கோவில் கடைகள் ஏலம் விடுவதில் தாமதத்தால் நஷ்டம்
திருவாலங்காடு கோவில் கடைகள் ஏலம் விடுவதில் தாமதத்தால் நஷ்டம்
ADDED : ஆக 09, 2024 12:54 AM
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் திருவாலங்காடில் அமைந்து உள்ளது.
பக்தர்கள் பூஜை பொருட்கள் வாங்க வசதியாக அர்ச்சனை பொருள் உட்பட பல கடைகள் கோவில் வளாகத்தில் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகின்றன.
கடந்த 2023 ஜூனில் கோவில் வளாகத்தில் உள்ள போட்டோ கடை 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும், அர்ச்சனை பொருட்கள் கடை 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது.
பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அர்ச்சனை பொருள் கடை 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது.
கடந்த மாதம் ஜூனில் ஏலம் முடிந்த நிலையில் இந்தாண்டுக்கான ஏலம் ஜூலை 1ம் தேதி விடப்பட்டது. ஒரு மாதம் தள்ளி ஏலம் விடப்பட்டது.
இருப்பினும் உள்ளூர் வியாபாரிகள் ஏல கடைகளின் அருகிலேயே கடை வைத்துள்ளதால், ஏலம் எடுக்க வந்தவர்கள் கடையை ஏலம் எடுக்க முன்வரவில்லை.
இதனால் திருத்தணி கோவில் நிர்வாகத்திற்கு 14 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.