/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
50 வழித்தடத்தில் மினிபேருந்து திருவள்ளூர் கலெக்டர் ஆலோசனை
/
50 வழித்தடத்தில் மினிபேருந்து திருவள்ளூர் கலெக்டர் ஆலோசனை
50 வழித்தடத்தில் மினிபேருந்து திருவள்ளூர் கலெக்டர் ஆலோசனை
50 வழித்தடத்தில் மினிபேருந்து திருவள்ளூர் கலெக்டர் ஆலோசனை
ADDED : செப் 07, 2024 09:36 PM
திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட அரசு நகர மற்றும் விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், முக்கிய கிராமங்கள் மற்றும் பிரதான நகர்களை இணைக்கும் வகையில் உள்ளது.
முக்கிய நகர் பகுதிகளில் இருந்து குக்கிராமங்கள், வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் போதுமான பொது பேருந்து வசதி இல்லை.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், மினிபேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 'மினி பேருந்து' இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, 'மினிபேருந்து' உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:
மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாவட்டம் முழுதும் 'மினிபேருந்து' இயக்குவதற்கான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 50 'மினிபேருந்து' வழித்தடம் அமைப்பதற்கு சர்வே மேற்கொண்டு, அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், ஊராட்சி உதவி இயக்குனர் பரணி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் மாதவன், ஸ்ரீதரன், இளமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.