/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கடைகளுக்கு தரமான பொருட்களை அனுப்ப திருவள்ளூர் கலெக்டர் அறிவுறுத்தல்
/
ரேஷன் கடைகளுக்கு தரமான பொருட்களை அனுப்ப திருவள்ளூர் கலெக்டர் அறிவுறுத்தல்
ரேஷன் கடைகளுக்கு தரமான பொருட்களை அனுப்ப திருவள்ளூர் கலெக்டர் அறிவுறுத்தல்
ரேஷன் கடைகளுக்கு தரமான பொருட்களை அனுப்ப திருவள்ளூர் கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஆக 21, 2024 11:18 PM

பொன்னேரி:'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு பணிகளை நேற்று மேற்கொண்டார்.
பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், தாசில்தார் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வு பணி நேற்று காலை, சோழவரம் அடுத்த அலமாதி பகுதியில் துவங்கியது. அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பிரிவு, புறநோயாளிகள் பிரிவுகளில் இருந்த நோயாளிகளிடம் விவரம் கேட்டறிந்தார். சுகாதார நிலையத்தை துாய்மையாக வைத்திருக்க அறிவுத்தினார்.
பின், அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை தினமும் பரிசோதிக்க வேண்டும் எனவும், மாதம் ஒருமுறை குழந்தைகளின் எடை, உயரம் கணக்கீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அலமாதி துவக்கப்பள்ளியில், 69.17 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள, வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டார். பின் பள்ளி வளாகம், கழிவறைகளை துாய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.
விஜயநல்லுார் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், உணவுப்பொருட்களின் இருப்பு, அவற்றின் தரம் பகுப்பாய்வு செய்வது தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தார்.
அங்குள்ள அரிசி மூட்டைகளை இயந்திரத்தில் வைத்து எடை பரிசோதனை செய்தார். ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதிசெய்யும்படி அறிவுறுத்தினார்.
சென்னை எல்லை சாலை திட்டப்பணிகளுக்காக ஜெகன்னாதபுரம் பகுதியில் அமைந்துவரும் மேம்பால பணிகளையும் பார்வையிட்டு, செயல் திட்டங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இரண்டாம் நாளாக இன்று, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.