/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது
/
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : செப் 04, 2024 09:16 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு 10,000 ரூபாய் காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.