/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் கேள்வி
/
தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் கேள்வி
தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் கேள்வி
தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் கேள்வி
ADDED : ஆக 20, 2024 08:12 PM
பொன்னேரி:பொன்னேரியில், நேற்று முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, பிறந்தநாளை முன்னிட்டு, காங்., கட்சி சார்பில், கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி காங்.,- எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் தலைமையில் நடந்தது.
இதில் திருவள்ளூர் காங்., எம்.பி,. சசிகாந்த் செந்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கர்ப்பிணியருக்கு ஊட்டசத்து தொகுப்புகளை வழங்கினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரயில்வே திட்டங்களுக்காக காங்., ஆட்சி காலத்தைவிட, ஏழு மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
நிதி அமைச்சர் பதில் அளிக்கும்போதும், 2013ல் ஒதுக்கப்பட்ட நிதியுடன், தற்போது, 2024ல் ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பீடு செய்கிறார். இதுபோன்ற ஒப்பீடுகளை செய்யாமல் தற்போது பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எத்தனை சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது என்பதே கேள்வி.
குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. ரயில்வே துறை மட்டுமின்றி, கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய ஊதியத்திற்கு உண்டான நிதியைகூட ஒதுக்கவில்லை.
பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடி தொழில் தொடர்பான பிரச்சனை குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அரசு அதிகாரிகளிடமும் ஆலோசித்து உள்ளேன். சிக்கலான பிரச்னையாக இருந்தாலும், சுமுகமான தீர்வு எட்டப்படும். அதிகாரிகள் விரைவில் தீர்வு காண்பதாக தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

