/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜாதி சான்று கிடைக்காதவர்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு
/
ஜாதி சான்று கிடைக்காதவர்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு
ஜாதி சான்று கிடைக்காதவர்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு
ஜாதி சான்று கிடைக்காதவர்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு
ADDED : மார் 26, 2024 10:26 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி தாலுகாவில், 11 கிராமங்களில், 5,000த்திற்கும் மேற்பட்டோர் கொண்டாரெட்டி இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜாதி சான்று வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் மேற்கண்ட கிராம மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு நேரில் சென்று, ஆர்.டி.ஓ., தீபாவிடம், எங்களுக்கு ஜாதி சான்று வழங்காததால் வரும் ஏப்.,19ம் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தலில் ஓட்டுகள் போடாமல் புறக்கணிக்க உள்ளோம் என, தெரிவித்து மனு அளித்தனர்.