/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 10, 2024 07:33 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளில் நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு வீடுதோறும் நுாலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நுாலகம் அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில், விருது வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுதோறும் நுாலகம் அமைத்து சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தனிநபருக்கு மாவட்டத்தில் நடத்தப்படும் புத்தக காட்சியில் 'சொந்த நுாலகங்களுக்கு விருது' 3,000 ரூபாய், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது வீட்டில் உள்ள நுாலகத்தில் எத்தனை நுால்கள் உள்ளன, எந்த வகையான நுால்கள் மற்றும் அரிய நுால்கள் விவரம் உள்ளிட்ட விவரங்களுடன், பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு dlothiruvallur@gmail.com என்ற இ-- மெயில் முகவரிக்கும், மாவட்ட நுாலக அலுவலர், மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலகம், மோதிலால் தெரு, திருவள்ளூர் என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

