/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர்கள் கைது
/
மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர்கள் கைது
ADDED : செப் 15, 2024 11:16 PM
திருத்தணி: திருத்தணி அடுத்த தெக்களூர் காலனி பகுதியில் மதுபாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருத்தணி கலால் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று தெக்களூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது காலனி பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் சேகர், 57 என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டித்து, 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
lகும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே சாலை கிராம சந்திப்பில், சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு மது விற்பனை செய்த, சாலை கிராமத்தை சேர்ந்த சங்கர், 36, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.