/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் சாலையில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

ADDED : ஆக 21, 2024 12:09 AM

ஊத்துக்கோட்டை:தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சென்னையில் இருந்து பெரியபாளயைம் வழியே, பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி, ஐதராபாத், கடப்பா, கர்நுால் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.
இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைக்கு முன் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் எடுத்து வரும் டூ- வீலர்களை கடைக்கு முன் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். காலை, மாலை வேளைகளில் பள்ளி மாணவர்கள் இந்த நெரிசலில் சிக்கி, குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ‛108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கி விடுகிறது. போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, மாவட்ட எஸ்.பி., உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.